வள்ளியூரில் சிவந்த கரங்கள் இரத்த தான கழகம் சார்பில் சிறப்பு இரத்த தான முகாம்...


நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சிவந்த கரங்கள் இரத்த தான கழகம் சார்பில் சிறப்பு இரத்த தான முகாம் நடந்தது. தன்னார்வலர்கள் கைகளை சோப்புபோட்டு கழுவியும் சானிடைசர் கொண்டு கழுவிவிட்டு முககவசங்கள் அணிந்து இரத்ததானம் வழங்கினர். முகாமில் 75 யூனிட் இரத்தம் பெறப்பட்டது. முகாமில் பணியாற்றிய மருத்துவகுழுவினர்கள் பாதுகாப்பு உடை( PPE) அணிந்து முகாமில் கலந்துகொண்டனர். முகாமில் வள்ளியூர் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் , மின்வாரிய இளநிலை பொறியாளர், இராதாபுரம் டாக்டர்.திலக் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர் முகாமில் கௌரவிக்கப்பட்டனர்.

4 views0 comments