top of page

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட வட்டார அளவிலான சுகாதார திருவிழாவில் மருத்துவ முகாம்...






தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டம் செய்துங்கநல்லூர் ஆர் சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழாவில் மாபெரும் மருத்துவ முகாம் துவக்க விழா இன்று (22.04.2022) நடைபெற்றது.


இவ்விழாவிற்கு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் பொற்செல்வன் தலைமை வகித்தார்.


இவ்விழாவில் செய்துங்கநல்லூர் ஊராட்சி தலைவர் பார்வதிநாதன், ஆர் சி பங்குத்தந்தை ஜாக்சன் அருள், ஒன்றிய குழு செயலாளர்.குமார் முன்னிலை வகித்தனர்.


வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.முத்துகுமார் வெங்கடேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.


துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் திரு மதுரம் பிரைட்டன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


வட்டார அளவிலான சுகாதார திருவிழாவை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டு பேசும்போது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் ஆரோக்கியத்தை காக்கவும் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ உதவி செய்கின்ற வகையில் மக்களை தேடி வரும் என்ற மகத்தான திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஆணையிட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம் வட்டாரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களைத் தேடி சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகின்றது மேலும் மக்களுக்கு பயன் தருகின்ற வகையில் தற்போது கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழா அனைத்து வட்டாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு இன்றைய தினம் கருங்குளம் வட்டத்திற்குட்பட்ட செய்துங்கநல்லூர் ஆர் சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய வசிக்கும் இடத்திலேயே வட்டாரத்துக்கு ஒரு முகாம் வீதம் சுகாதார திருவிழா நடத்தப்படுகின்றது. சாதாரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூலம் வழங்கப்படுகிறது.


மேலும் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்றவற்றிற்கான சிகிச்சை பெற போதுமான வசதிகள் அருகாமையில் கிடைப்பதில்லை. எனவே, வட்டாரம் தோறும் நடைபெறுகின்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா மருத்துவ முகாம்களின் மூலம் கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக தொலை தூரத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு தாய் சேய் நலம், தொற்றா நோய்களுக்கான சிறப்பு பொது மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு பிரிவு, காது-மூக்கு-தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை மருத்துவம், புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மருத்துவம் மனநல மருத்துவம் இந்திய முறை மருத்துவம் ஐசிடிஸ் இ சேவைகள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் மக்கள் போன்றவைகளுக்கு சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சைக்கு உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப் படுகிறார்கள் இம்முகாமில் வாயிலாக அதிநவீன பரிசோதனை சாதன வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்கச் செய்தல் நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அழித்தல் பரிந்துரை மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டு மக்களுக்கு தேவையான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன இம்முகாமில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன. வட்டார அளவிலான சுகாதார திருவிழா கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்கள் ஒரு வட்டாரத்திற்கு ஒருமுகாம் வீதம் சுகாதாரத் துறையின் ஏழு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


முகாமின் போது சித்த மருத்துவம் பல்துறை கண்காட்சி மற்றும் மாண்புமிகு முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்ட விளக்க கண்காட்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் செயல்படும் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் ஏறுமுகமாக நடைபெறுவதால் ஆரம்ப நிலையிலேயே மக்கள் தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு தங்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் நோய்களுக்கான தகுந்த சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கு முகாம்கள் ஏதுவாக இருக்கும் மக்களின் ஆரோக்கியத்தை காத்திடவும் நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்பதையும் கருத்தில் கொண்டு மக்களுக்கான பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் இம்முகாம்களில் தங்களை பரிசோதனை செய்து கொண்டு பொதுமக்கள் உடல் நலத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் என துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் பொற்செல்வன் அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக தமிழக முதல்வரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் ஆர் சி நடுநிலைப்பள்ளி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு கண் கண்ணாடி மற்றும் தொழு நோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு எம் சிஆர் செப்பல் மற்றும் வாக்கிங் ஸ்டிக் செய்துங்கநல்லூர் ஊராட்சி தலைவர் பார்வதிநாதன் மற்றும் ஒன்றியகுழு செயலாளர் குமார் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தாய்-சேய் நல அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் கன்னியம்மாள், டாக்டர் சுருதி மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வர்ஷா மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர், டாக்டர் அஜய் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் ரதி செல்வம் எஸ்தர் மருத்துவ அலுவலர்கள் டாக்டர் கிஷோர் கிருஷ்ணவேணி ஜனனி பரத் மற்றும் மேல் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் சமுதாய சுகாதார செவிலியர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் தொழுநோய் பிரிவு அலுவலர்கள் காச நோய் பிரிவு அலுவலர்கள் மக்களை தேடி மருத்துவ பிரிவு அலுவலர்கள் ரத்ததானம் குழு அலுவலர்கள் ஆய்வக நுட்புனர்கள் மருந்தாளுநர்கள் தனியார் மருத்துவக் குழு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள் இந் நிகழ்ச்சியின் இறுதியில் கருங்குளம்


வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி அவர்கள் நன்றி கூறினார் .

63 views0 comments