சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு 2019-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு - SP வழங்கினார்...
*2019-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசினை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.*

தமிழ்நாடு முதலமைச்சரின் மாவட்ட மற்றும் மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2019-ம் வருடத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசினை இன்று *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப.,* அவர்கள் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் *திரு.பார்த்திபன்* மற்றும் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் *திரு.ஜீன்குமார்*, அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பரிசினை வழங்கி பாராட்டியுள்ளார்.
மேற்படி காவல்நிலையத்தில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்கும், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை விரைந்து தடுத்து நடவடிக்கை எடுத்ததற்கும், காவல் நிலையத்திலுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் முறையான வகையில் பின்பற்றியதற்காகவும், காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்ததற்காகவும் ஆகியகாரணங்களுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.