தனியார் டவரில் பேட்டரியை திருடிய நபர் கைது...
தனியார் டவரில் பேட்டரியை திருடிய நபர் கைது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த சேகர்(60), என்பவர் இட்டேரி பகுதியில் உள்ள ஏர்டெல் டவரில் ரோந்து அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
17.11.2022-ம் தேதி அன்று அதிகாலை சேகர் அவர்கள் பணியில் இருக்கும் போது மேற்படி டவர் பகுதியில் இருந்து சென்சார் மூலம் சேகர் கைபேசியின் எண்ணிற்கு எச்சரிக்கை தகவல் கிடைக்க பெற்று டவர் பகுதியில் சென்று பார்த்தபோது கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த குமார்(24) என்பவர் ஏர்டெல் பேட்டரியை திருடி விட்டு, சம்பவ இடத்திலேயே தூங்கி உள்ளார்.
பின்னர் சேகர், எதிரியை பிடித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையம் கொண்டு புகார் அளித்ததன் பேரில் *உதவி ஆய்வாளர் திரு.வேல்முருகன், அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பேட்டரியை திருடிய குமாரை கைது செய்தார்.