திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 நபர்கள் கைது. மேலும் ரூ. 45 ஆயிரம் அபராதம் விதித்து சுமார் 20 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.
மேலும் பள்ளி அருகே கூல்-லிப் முதலான புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தல் மற்றும் எடுத்துச் செல்பவர்கள் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை.*
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப.,* அவர்கள், மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து 15.06.2022 அன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 25 நபர்களை *COTPA* Act - ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து *கூல் லிப் - 242 பாக்கெட், கணேஷ் - 716, பான் மசாலா - 270 பாக்கெட் உட்பட சுமார் 20 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து 9 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.*
*இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தல், எடுத்துச் செல்பவர்கள் மீதும் மேலும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோர் மீதும் அதற்கு துணை புரிபவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்தார். இதுவரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட 25 பேர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*