top of page

நெல்லை மாநகரை அச்சுருத்தும் பலூன் வியாபாரம் - கொரோனா தொற்று பரவ அதிகப்படியான வாய்ப்பு...










மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஐந்து கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முதல் நான்கு கட்ட ஊரடங்கு உத்தரவு கடுமையாக இருந்த போதிலும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பல்வேறு நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டது. அதன்படி முக கவசம் அணிவதும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் நடமாடுகின்றனர். இதனால் மீண்டும் தெருவோரக் கடைகள் அதிகமாக ஆங்காங்கே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக முகக் கவசங்கள் கையுறைகள் விற்பனை செய்யும் கடைகள் காய்கறி கடைகள் மீன் மற்றும் இறைச்சி கடைகள் ஆங்காங்கே புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக தொடங்கப்பட்டு உள்ள சாலையோர கடைகளில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக விற்பனை செய்யும் நபர்கள் முகக் கவசங்கள் அணிவது இல்லை. அதுபோல வாங்க வரும் நபர்களும் முகக் கவசங்கள் அணிவதும் இல்லை. தற்போது நெல்லை மாநகரத்தை பொருத்தவரை சாலைகளில் உலாவும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணை கவர்வது ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ராட்சத சைஸ் பலூன்கள். இந்த பலூன்களை விற்பனை செய்பவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் . இவர்கள் நெல்லை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கைகளில் பலூன்களுடன் சுற்றித்திரிகிறார்கள். இவர்களிடம் உள்ள பலூன்களின் அளவை பார்த்து வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் பெரும்பாலும் சிறிய அளவிலான பலூன்களை 10 ரூபாய்க்கு விற்றுவிடுகின்றனர்.


இதில் உச்சகட்ட ஆபத்து அந்த பலூன்களை இவர்கள் தங்களது வாயினால் ஊதி காண்பித்து கொடுப்பதுதான். இதனால் அந்த பலூன்களுக்குள் இவர்களது எச்சில் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. இவர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பின் அந்த நோய் இந்த பலூனை வாங்கி செல்லும் நபர்கள் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.


முககவசம், கையுறை என எந்தவித பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள சானிடைசர், ஹேண்ட்வாஷ் என எதுவும் இல்லாமல் பலூன் மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதன் தீவிரத்தை உணர்ந்து நெல்லை மாநகராட்சி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது...





News sponser : https://lapureherbals.in/



43 views0 comments
bottom of page