என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வங்கி மேலாளர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி





திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள பாளையங்கோட்டை முருகன்குறிச்சியிலுள்ள வங்கி மேலாளர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி கொண்டு அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தனர்..
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் இதுநாள்வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாதிப்புகளே இருந்து வந்த நிலையில் இன்று மாநகரத்தின் பல்வேறு பகுதியிலும் கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பொது மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணியாற்றும் கட்டிட தொழிலாளர்கள் 3 பேருக்கும், நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் மூன்று பேருக்கும். நெல்லை டவுனில் இரண்டு பேருக்கும், பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள வங்கியில் மேலாளராக பணி புரியும் என்.ஜி.ஓ பி காலனியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாராஜா நகர் பகுதியில் வசித்த இரண்டு பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்து கொரோனா நோய் பாதிப்பு குறித்து தகவல் வெளிவந்த நிலையில் நெல்லை மாநகர மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையில் உள்ள லஷ்மி விலாஸ் வங்கியில் பணியாற்றிய மேலாளருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதை அடுத்து அந்த வங்கி கிளை மூடப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
News sponser : https://lapureherbals.in/
