மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பாக இரன்டு நாள் விழிப்புணர் பயிற்சி முகாம்...




மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பாக மேலபாட்டம் கிராமத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்க்கான இரன்டு நாள் ( 27-11-21 மற்றும் 28-11-21 ) விழிப்புணர் பயிற்சி முகாம் கல்வி அதிகாரி ரவி சங்கர் தலைமையில் நடைபெற்து மேலபாட்டம் பஞ்சாயத்து தலைவர் ரத்தினம் தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் கொரோன நோய் மற்றும் காச நோய், டெங்கு நோய் இவை பரவும் விதம் மற்றும் தடுக்கும் விதம் பற்றி எடுத்துரைத்தார். நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அரசின் நல திட்டம் பற்றி பேசினார், கல்லூரி பேராசிரியர் மரு. பாலமுருகன் மகளிர்கான நல திட்டம் பற்றி எடுத்துரைத்தார். பொன்பாண்டி அவர்கள் முதல்வர் காப்பீட்டு திட்டம் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டம் பற்றி எடுத்துரைத்தார். இறுதியில் மகளிர் குழு தலைவி கோமதி நன்றி கூறினார்