மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..
"அனைவரும் என்றால் அனைவருமே "

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலி மாநகராட்சி, பாளை நகர், ஏ.ஆர்.லைன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்
மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
அதில் ஒரு நிகழ்வாக ஏ.ஆர்.லைன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் காகித பறவை தயாரித்தல், கை அச்சு பதித்தல், வண்ண காகிதங்களைக் கொண்டு உருவங்கள் செய்தல், பட்டம் செய்தல் போன்ற நிகழ்வுகளை செய்தனர்.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் செ.முத்துலட்சுமி உதவி ஆசிரியை க.சைலஜா குமாரி மற்றும் சிறப்பாசிரியர் சு.கீதா ஆகியோரும் பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.