நெல்லையில் தடையை மீறி 50% பயணிகள் ஆட்டோக்கள் இயக்கம் - நடவடிக்கை எடுக்கப்படுமா?






தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு 11ம் தேதி முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பயணிகள் ஆட்டோ இயக்குவதற்கான தடை தொடர்ந்து அமலில் உள்ளது. ஆனால் நெல்லையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் தடையை மீறி தைரியமாக இயக்கப்படுகிறது.
காவல்துறையினர் ஒரே ஒருநாள் மட்டும் தடையை மீறி இயக்கப்படும் பயணிகள் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பயணிகள் ஆட்டோக்கள் எந்தவித தடையும் இல்லாமல் இயக்கப்படுகிறது என்றும். சட்டத்தை மதிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை இயக்காமல் அடுத்தவேளை உணவுக்கு கூட அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் உள்ளதாகவும், எனவே அனைவரும் ஆட்டோக்களை இயக்கலாம் என்று அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு உத்தரவை மீறி பயணிகள் ஆட்டோக்களை இயக்குபவர்கள் திறமைசாலிகள் போன்றும் சட்டத்தை மதிப்பவர்கள் ஏமாளிகள் என்பது போன்று உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.