நெல்லையில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று - கட்டாயம் முகக்கவசம் அணிவீர் ...
நெல்லையில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று -
இரண்டாம் நாளாக கபசுரக்குடிநீர் முகாம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தினர்.









திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் முகாம் திருநெல்வேலி RTO அலுவலகம் அருகில் இரண்டாவது நாளாக இன்று நடந்தது.
அதிகரித்து வரும் நோய் தொற்றை தடுக்கும்விதமாக தினமும் கபசுரக்குடிநீர் முகாம் நடத்துவது என்று முடிவு செய்து நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் தினமும் நடத்தப்படுகிறது.
இன்று என் .ஜி .ஓ காலனி எம்.ஜி .ஆர் ஹோட்டல் உரிமையாளர் (ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்) காந்தி தலைமையில் நடந்த முகாமில் சங்கத் தலைவர் சரவணராஜன், செயலாளர் சதீஷ் குமார், பொருளாளர் பிரபு உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முகாமில் கபாசுரக்குடிநீர் மற்றும் இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நன்கொடையாளர்கள் உதவியுடன் தினமும் கபாசுரக்குடிநீர் வழங்கப்படவுள்ளது.