ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதிஉதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
TN ALL DRIVERS ASSOSIATION ஆகிய ஓட்டுனர் சங்கத்தில் 22000 உறுப்பினர்கள் உள்ளனர். திருநெல்வேலி கிளையில் சுமார் 1650 சங்க ஓட்டுனர் குடும்பங்கள் உள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 ஊரடங்கு தடை சட்டம் அமலில் இருப்பதால் எங்கள் சங்கத்தின் ஓட்டுனர்கள் யாரும் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால் சங்கத்தின் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சங்கத்தில் உள்ள ஓட்டுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதிஉதவி கிடைக்க வழிவகை செய்து தருமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திருநெல்வேலி TN ALL DRIVERS ASSOSIATION மாநில தலைவர் முத்துகுமார் மற்றும் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் கோரிக்கை மனுகொடுத்தனர்.