top of page

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றுவோம் - விழிப்புணர்வு பொதுக்கூட்டம்







திருநெல்வேலி மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு

பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கந்தான் பாறை கிராமத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி முன்னிலை வகித்தார். ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் கண்ணா கருப்பையா, மாவட்ட காப்பாட்சியர் சத்திய வள்ளி மற்றும் பொதிகை தமிழ் சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டு முடிவில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்பு நிகழ்த்தினார் கள விளம்பர உதவியாளர் வேல்முருகன். இறுதியில் பஞ்சாயத்து தலைவர் கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.

28 views0 comments
bottom of page