ATM மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு...
*திருநெல்வேலி மாவட்டம்* சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வங்கி ATM மையங்களில் நடைபெறும் முறைகேடுகளையும், குற்றங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்கள் ATM கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க பழகிக் கொள்ள வேண்டும். மேலும் முன்பின் தெரியாதவர்களிடம் ATM கார்டுகளை கொடுத்து பணம் எடுக்கும்போது, அந்த நபர்கள் உங்களிடம் ATM கார்டை மாற்றி கொடுத்து விடுவது போன்ற பல்வேறு நூதன திருட்டில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், ATM மையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தென்பட்டால், அந்த நபர் நீண்ட நேரம் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தால், உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு செய்து அசத்தி வருகின்றனர். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.*
