குடியரசு தின விழாவில் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..
நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி மலையில் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது சிக்கித்தவித்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்ட நபர்களை துணிச்சலோடு பத்திரமாக மீட்ட மற்றும் மீட்புப் பணி புரிந்த தீயணைப்புத்துறை திருநெல்வேலி மாவட்ட அலுவலர் திரு சத்திய குமார் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் பாளையங்கோட்டை நிலைய அலுவலர் திரு வீரராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 52 பேர் ஆகியோருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் நற்சான்று வழங்கினார்...


