top of page

மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும்ZEE 5 நிர்வாகம் மீது புகார்...








Godman என்கிற online திரைப்படம் ஒன்றின் trailer சமீபத்தில் ZEE 5 என்கிற online channel ல் வெளியாகி உள்ளது.


அந்த trailer ல் பிராமணர்களைப் பற்றியும் , இந்து மதத்தைப்பற்றியும், அவதூறான கருத்துக்களும் ,கொச்சையான காட்சிப்படுத்துதல்களும், வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


மேற்கண்ட trailer, வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் உள்ளதாகவும். இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


எனவே மேற்குறிப்பிட்ட அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ZEE 5 நிர்வாக இயக்குனர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


என்று அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

News sponser : https://lapureherbals.in/



17 views0 comments
bottom of page