அணைத்தலையூர் கிராமத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி...

நெல்லை மாவட்டம் அணைத்தலையூர் கிராமத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடன்குளம் அப்துல்கலாம் எஜுகேஷனல் சோசியல் சர்வீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணைத்தலையூரைச் சார்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பள்ளி பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பு செய்தனர். இதில் அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மா.முருகன் செய்திருந்தார்.