மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் அம்மா பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் ...

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் அம்மா பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள், ஜமாத் தலைவர்கள் உள்ளிட்ட ஊர்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வருகைதரும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை தெரிவித்து வங்கி பாஸ் புத்தகம், ஆதார் கார்டு, போன்ற தேவைப்படும் ஆவனங்களின் நகல்களை கொடுத்து அதற்குண்டான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அம்மா பாதுகாப்பு திட்டத்தில் இணைந்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன், உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன், சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.