ஆலங்குளம் பகுதியில் 12 பேருக்கு கொரனோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஆலங்குளத்தில் சோதனை சாவடி மற்றும் அரசு மருத்துவமனையில் கொரனோ பரிசோதனை நடந்து வருகிறது. சோதனை சாவடியில் பரிசோதனை செய்தவர்களில் 12 பேருக்கு கொரனோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் புதுப்பட்டி , மருதம்புத்தூர் குருவன் கோட்டை காசியாபுரம் மற்றும் ஆலங்குளம் ஜோதி நகரை சேர்ந்தவர்கள் 9 பேர் என மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருப்பது போல் தென்பட்டால் உடனே ஆலங்குளம் சுகாதார துறையினரை உடனே அணுகவும் வலியுறுத்தினர்.தென்காசி மாவட்ட சுகாதார பணிகள்மருத்துவர் ராஜ்குமார், வட்டாச்சியர் பட்டமுத்து, காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், சண்முகநாதன், சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் கங்காதரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கொரனோ பாதித்தவர்கள் வீடுகளில் ஆய்வு செய்தனர்.
*மேலும் இந்த 12 பேர்களுக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளதால் ஆலங்குளம் பகுதி மக்கள் கவனமாக இருக்க சுகாதாரத் துறையினர் ஆலங்குளம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.*