ஆலங்குளத்தில் குட்கா- பீடி கடத்தலில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பறிமுதல்...


தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தில் மறைத்துவைத்து குட்கா- பீடி ஆகியவற்றை கொண்டு செல்வது தொடர் கதையாக உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் ஆலங்குளத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் உணவு பொருட்கள் காய்கறிகள் மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன . இந்த நிலையில் ஆலங்குளம் சோதனை சாவடியில் இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது
கேரளா உள்ளிட்ட பிறபகுதிகளுக்கு செல்லும் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா மூட்டைகள் பீடிபண்டல்களை கண்டுபிடித்தனர். குட்கா மூட்டைகள் பீடிபண்டல்களை கடத்திச்சென்ற 4 வாகனங்களை பிடித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.