வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம்...




வல்லநாடு வட்டார காசநோய் தடுப்பு பிரிவும் மற்றும் சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் ஆயுஷ் மருந்துகள் பற்றிய நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் கிஷோர் கவுதம் தலைமை வகித்தார். சித்த மருத்துவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அகரம் பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் கலந்து கொண்டார். காசநோயின் அறிகுறிகள் பற்றி முதல்நிலை காசநோய் மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா பேசினார். டாக்டர் கிஷோர் கௌதம் காசநோய் மருத்துவம் பற்றி தலைமை உரையாற்றினார். சித்த மருத்துவர் செல்வகுமார் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் உணவுகள், சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் ஆயுள் வளர்க்கும் சித்த மருத்துவம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.