நெல்லையில் அசம்பிளி ஆஃப் காட் சபை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது







நெல்லையில் அசம்பிளி ஆஃப் காட் சபை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவும் இரவு உணவும் வழங்கப்பட்டது
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் . அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவி செய்து வருகின்றன . இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள அசெம்பிளி ஆப் காட் சபை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதியம் முட்டை பிரியாணியும் இரவு உணவும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது . சிறப்பு விருந்தினராக ஒன்பதாவது வார்டு முன்னால் மாமன்ற உறுப்பினர் கணேசன் கலந்துகொண்டார் . பாஸ்டர் பாலஸ் மற்றும் உதவி போதகர் ஜோயல் ஆகியோர் முன்னின்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள் .