கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி...

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தன்னார்வலர் ஜான் பிரிட்டோ அவர்கள் காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்
நிக்சய் மித்ரா எனும் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் வறுமைகோட்டின் கீழ் உள்ள காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்கள் சிகிச்சை காலம் முழுவதும் வீட்டிற்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கிவருகின்றனர்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தன்னார்வலர் ஜான் பிரிட்டோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார் மேலும் ஆய்வக நுட்புனர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
