கோவில்பட்டி அருகே டிராக்டர் மீது லாரி மோதல் - 2பேர் காயம்


கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் சாலையில் இருக்கும் செடிகளுக்கு நள்ளி பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சமுத்திரராஜ் இன்று காலையில் தண்ணீர் ஊற்;றி கொண்டு இருந்துள்ளார். அப்போது சேரன்மகாதேவியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகருக்கு செல்லும் லாரி தண்ணீர் உற்றிக்கொண்டு இருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் ஆர்.ஆர்.நகர் ஆவுடையாபுரத்தினை சேர்ந்த லாரி டிரைவர் ராஜமுனியாண்டி, டிராக்டர் டிரைவர் சமுத்திரராஜ் இருவரும் காயம் அடைந்தனர். விபத்தில் லாரியின் முன்பு பகுதி அதிகமாக சேதமடைந்த காரணத்தினால் லாரி டிரைவர் ராஜ முனியாண்டி கால்கள் அடிப்பகுதியில் சிக்கி கொண்டு வலியால் துடித்து கொண்டு இருந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லாரியில் சிக்கி தவித்து கொண்டுடிருந்த டிரைவர் ராஜமுனியாண்டியை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவரை பாத்திரமாக மீட்டனர். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.