கோவில்பட்டி அருகே சாலையில் உள்ள தடுப்பில் மோதி கார் விபத்து ஒருவர் பலி



திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அல்லூரை சேர்ந்த அங்கமுத்து என்பவரது மகன் கண்ணன்(33) .சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு இருந்த நிலையில் திருச்சி பகுதியை சேர்ந்த சிலரை கண்ணன் நெல்லைக்கு தனது காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. நெல்லையில் அவர்களை இறங்கி விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளார். கார் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல்அருகே வரும் போது எதிர்பாரா விதமாக சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.