top of page

நெல்லை தற்காலிக முகாமில் உள்ள ஆதரவற்றர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகாசனப் பயிற்சி





நெல்லையில் ஆதரவற்றவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மீட்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் . அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் நெல்லை மாநகர்பகுதியில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவிற்றி எவ்வித பாதிப்பிற்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் மீட்கப்பட்டு 120 பேர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டு , அரசியல் அமைப்புகள் , தன்னார்வ அமைப்புகள் சார்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியில் சுற்றித்திரிந்தவர்களை ஒரு முகாமில் வைக்கப்பட்டள்ளதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படதாக வகையிக் மன பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திறந்த வெளியில் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முகாமில் உள்ளவர்களுக்கு மனவளக்கலை மன்றம் சார்பில் யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. மன அழுத்தத்தை போக்கும் அடிப்படை பயிற்சிகளான மூச்சு பயிற்சி , ரத்த ஓட்டத்திற்கான பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டது. முகாமில் இருந்தவர்களும் ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர் .

15 views0 comments
bottom of page