தொடர் விடுமுறை காலத்தில் தடையற்ற மின்விநியோகம் வழங்க அயராது உழைத்த அனைவருக்கும் பாராட்டு...
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் தடையற்ற
மின்விநியோகம் வழங்க அயராது உழைத்த அனைவருக்கும் திருநெல்வேலி மண்டல
தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்) பாராட்டு...

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி மண்டல
தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்),
பொறிஞர்.கி.செல்வகுமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார் அதில்....
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14.01.2022 முதல் 18.01.2022
வரை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த தொடர் விடுமுறை காலத்தில் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி,
தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஊரடங்கு
கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வித மின்தடையும் இன்றி தடையற்ற மின்விநியோகம்
வழங்க அயராது பாடுபட்ட தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும்
தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தை சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும்
பொறியாளர்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தற்போது கொரோனா தொற்று தொடர்ந்து
அதிகரித்துவருவதால் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்
அனைவரும் அரசு அறிவித்துள்ள கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல் மற்றும்
சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல்
கடைப்பிடித்து பணிபுரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மண்டல
தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்),
பொறிஞர்.கி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்...