top of page

மதுரை ரயில் நிலையத்தில் வருமானமின்றி வாடும் கூலி போர்ட்டர்களுக்கும், தேனீர் விற்பவர்களுக்கும் உதவி






ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை சுமந்துசெல்லும் கூலி போட்டர்கள், ரயில் பெட்டிக்கு அருகில் வந்து பயணிகளுக்கு தேவையான தேனீர், உணவு பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் நிரந்தர வருமானம் இல்லாமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை அறிந்த மதுரை கோட்ட முது நிலை வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, கோட்ட வர்த்தக மேலாளர் எம்.பரத்குமார் ஆகியோர் மதுரை கோட்ட வர்த்தக பிரிவு ஊழியர்களை தங்களுக்குள் குழு அமைத்து வருமானமின்றி வாடும் கூலி போர்ட்டர்களுக்கும், தேனீர் விற்பவர்களுக்கும் உதவும் படி ஆலோசனை வழங்கினர். இதனால் தன்னார்வம் கொண்ட வர்த்தக பிரிவு ஊழியர்கள் தங்களின் சொந்த சேமிப்பின் வாயிலாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, புளி, கோதுமை மாவு போன்ற சமையல் பொருட்களை மொத்தமாக வாங்கி அவற்றை ஒரு மாதத்திற்கு தேவையான அளவில் 200 மூடைகளாக தயார் செய்தனர். இந்த சமையல் பொருட்கள் இன்று (25.4.2020) மதுரை ரயில் நிலையத்தில் கூலி போர்ட்டர்கள், தேநீர் விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய 75 பேருக்கு மதுரை மேற்கு பட்ட தாசில்தார் டி.எம். கோபி முன்னிலையில் வழங்கப்பட்டது. மீதமுள்ள 125 மூடைகள் மானாமதுரை பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் பணியாற்றும் கூலி போர்ட்டர்கள், உணவு விற்பனையாளர்கள் ஆகியோருக்கு வழங்க அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (25.4.2020) மதுரை மாநகரில் ஏழை எளிய மக்களுக்கு இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (IRCTC) சார்பாக 1200 தயிர் சாத பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த தன்னலமற்ற சேவையை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின் பாராட்டினார்.



Madurai division Commercial staff distributed free groceries to coolie porters



As suggested by Shri V. Prasanna, Sr.DCM and Shri M. Bharath Kumar, DCM, the staff working in Commercial Department of Southern Railway, Madurai division, voluntarily distributed 200 grocery kits to the Coolie porters and platform vendors today (25.04.2020), in the presence of Shri T.M. Gopi, District Tahsildar, Madurai.


75 pockets of grocery kits distributed at Madurai railway station and balance distributed at Ramanathapuram, Rameswaram, Paramakudi, Manamadurai, Vanchi Maniyachchi, Kovilpatti, Tirunelveli, Dindigul, Tuticorin and Tirunelveli railway stations.


Further, IRCTC Madurai distributed 1200 pockets of free curd rice to the destitute.


Shri V.R. Lenin, Divisional Railway Manager, Madurai division, complimented the officials.



जन संपर्क अधिकारी/मदुरै

Public Relations Officer/Madurai.

14 views0 comments
bottom of page