
பீடி கம்பெனி முதலாளிகளுக்கு SDTU பீடி தொழிலாளர் நலச் சங்கம் கோரிக்கை.

SDPI கட்சியின் தொழிற்சங்க பிரிவான
SDTU தொழிலாளர் நலச் சங்கம் நெல்லை மாவட்ட தலைவர் களந்தை மீராசா வெளியிட்டுள்ள அறிக்கையில்
பீடித் சுற்றும் பெண் தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் ஆண் தொழிலாளர்கள் டிரைவர்கள் அலுவலக வேலை செய்பவர்கள் மற்றும் பீடி தொழில் சம்பந்தமாக அனைத்து வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் பீடி கம்பெனி நிறுவனத்தினர் ஜனவரி மாதம் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிக படுத்துவார்கள் ஆனால் இந்த வருடம் எந்த பீடி கம்பெனி நிறுவனமும் இதுவரை பீடித் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகப்படுத்த வில்லை
SDTU பீடி தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக முதலாளிகளுக்கு ஒரு கோரிக்கை. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பீடி கம்பெனி நிறுவனத்தின் முதலாளிகள் போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு வருடம் வருடம் வழங்கக்கூடிய அந்த சம்பள உயர்வை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்...