top of page

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மனிதநேய சேவையை பாராட்டி பாதுகாப்பு உபகரணம் வழங்கிய தொண்டு நிறுவனம்...





கொரானா பாதிப்பால் உலகமே

பெரும் பாதிப்புக்குள்ளாகி. தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

கொரானா பாதித்து உயிரிழந்தவர்களை

உறவினர்களே நெருங்க தயங்கும் சூழலில் எஸ்.டி.பி.ஐ இந்தியா முழுவதும்

கொரானா பாதித்து உயிரிழந்த நபர்களின் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்து வருகிறது. நெல்லை, தென்காசி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட ‌கொரோனாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்களின் உடல்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தன்னார்வலர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவரவர் மதப்படி நல்லடக்கம் மற்றும் தகனம் சேர்கின்றனர் இவர்களின் ‌தன்னலமற்ற சேவைகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


கொங்கராயங்குறிச்சி PAANA தொண்டு நிறுவனம் சார்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின்

மனித நேய சேவைகளை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணிக்காக, 80 பாதுகாப்பு கவச உபகரணங்கள் அடங்கிய மாஸ்க், 100 கையுறை, முகக்கவசம் , 10 லிட்டர் ‌சானிடைஸர் ஆகியவற்றை எஸ்.டி.பி.ஐ கட்சி

மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது மூலம் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களிடம் வழங்கினர்.


இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முபாரக் அலி, நெல்லை தொகுதி சுத்தமல்லி ரிபாயி, மஹ்பூப்ஜான், அப்துல்வதூத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்...



31 views0 comments
bottom of page