நெல்லை மேலப்பாளையம் மருத்துவமனையை கொரோணா வார்டாக மாற்றுவதை கைவிட SDPI கோரிக்கை

நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி மேலப்பாளையம். இங்கு செயல்படும் அரசு மருத்துவமனையில் ககொரானா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் மேலப்பாளையம் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையின் போது இங்கு கொராண நோயாளிகளை தங்க வைக்க கூடாது காரணம் இந்த பகுதியானது மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய ஒரு பகுதியாகும் ஆகையால் நோய்கள் வேகமாக பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது ஏற்கனவே கடந்த வருடம் இதே மாதத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட நபர்கள் மர்ம காய்ச்சலால் மரணம் அடைந்திருக்கிறார்கள் . தற்போது உள்ள சூழலில் அதுவும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக்கூடிய இந்த தருவாயில் அதிகமான வெளிமாநிலத்தில் தொழில் செய்தவர்கள் , வெளிநாட்டில் வேலை இழந்தவர்கள் அதிகம் வசிக்ககூடிய பகுதியாக உள்ளது. இந்த சூழலில் மக்கள் போக்குவரத்து நெருக்கடி மிக்க இந்தப் பகுதியில் கோரோனா வார்டு மாற்றுவதும் கோரோனா நோயாளிகளை இங்கு தங்க வைப்பது என்பது மிகவும் ஆபத்து. வேகமாக நோய் பரவக் கூடிய சூழல் ஏற்படும் மாவட்ட நிர்வாகம் மருத்துவமனை நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்று நடவடிக்கை செய்ய வேண்டும் மேலப்பாளையம் மருத்துவமனையை கொரோணா வார்டாக மாற்றுவதை கைவிடவேண்டும் என SDPI கட்சி பாளையங்கோட்டை தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ் கூறினார்..