நெல்லையில்ல் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்...



கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும். மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
மேலப்பாளையம் சந்தையில் நடந்த போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி தலைமை வகித்தார்
மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி செயலாளர் ஹயாத் முகம்மது, பொருளாளர் ஆரிப் பாட்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மின்னதுல்லாஹ்
தொகுதி செயலாளர் புகாரி சேட், துணைத்தலைவர் சலீம் தீன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் மாவட்டத்தில் சித்தா கல்லூரி முன்பு மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையிலும் பேட்டையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது காசிம் தலைமையிலும் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர்,வெல்லங்குளி, கல்லிடைக்குறிச்சி ,அம்பை,வீ.கே.புரம், மானூர் ஆகிய இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பதாகை ஏந்தி கோசம் மிட்டு , கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
News sponser : https://lapureherbals.in/
