top of page

மேலப்பாளையத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த SDPI தன்னார்வலர்கள்..








மேலப்பாளையத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI தன்னார்வலர்கள்!


கொரோனா தொற்றின் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளயத்தை சேர்ந்த 65 வயது பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளிடம் அவரது உடலை பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


உடலை பெற்றுக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI கட்சியின் தன்னார்வலர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.








News sponser : https://lapureherbals.in




24 views0 comments
bottom of page