இரவனசமுத்திரம் ஊரில் புகுந்த 12 அடி மலைப்பாம்பை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்த எஸ்டிபிஐ நிர்வாகி...



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள இரவணசமுத்திரம் சின்னதெரு பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சி மருத்துவ சேவை அணி தொகுதி தலைவர் துரை முன்னா அவர்களை தொடர்பு கொண்டு மலைப்பாம்பு தெருவில் புகுந்து விட்டது என தகவல் வந்ததை அடுத்து ரவனை நகர செயலாளர் சேக் மற்றும் தெருமக்கள் சேர்ந்து ராமாநதியில் இருந்து ஊருக்குள் புகுந்த 12 அடி மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் கட்டினர் எஸ்டிபிஐ நிர்வாகிகள் வனத்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு பிடிபட்ட மலைப்பாம்பை ஒப்படைத்தனர் எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் பணியை மக்கள் பாராட்டினர்