கல்லிடைக்குறிச்சியில் உடல் நலக்குறைவால் இறந்த முதியவர் உடலை தகனம் செய்த SDPI தன்னார்வளர்கள்...




கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர்மேட்டு தெருவில் வசித்து வந்த வள்ளிஆனந்த் வயது 65 உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார், இன்று அதிகாலை வீட்டில் காலமானார் முதியவரின் குடும்பத்தார் எஸ்.டி.பி.ஐ கட்சியை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை இறுதி சடங்கு செய்ய அழைத்ததின் அடிப்படையில்
மாவட்ட பொதுச் செயலாளர் பீர் மஸ்தான் தலைமையில் 6 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியின் தன்னார்வர்களுடன் இன்று 26.07.2020 மாலை 4.00 மணியளவில் அவரது உடலை முறையாக உரிய பாதுகாப்புடன் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை க்கு கொண்டு சென்றனர் அங்கு கூடிய 100க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் உடலை தகனம் செய்ய கூடாது என தடுத்தனர் தகவல் அறிந்து வி.கே.புரம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர் மாலை 5 மணி அளவில் வள்ளி ஆனந்த் உடல் எரிவாயு மேடையில் உரிய முறையில் தகனம் செய்யபட்டது...