நெல்லையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்தமடை முதியவரை நல்லடக்கம் செய்த SDPI தன்னார்வலர்கள்...



நெல்லையில் இன்று (ஜூலை.22) அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உடலை பெற்று அடக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி தன்னார்வலர்களிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, உடலைப் பெற்று
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இஸ்லாமிய மதப்படி தொழுகை நடத்தி பத்தமடை பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்தனர்