பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகளிலிருந்து விலகி 250 பேர் SDPI கட்சியில் இணைந்தனர்...




SDPI கட்சியின் வீரியமிகு செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயல்பாடுகள் இளைஞர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், பிற அமைப்பினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் விளைவாக நாளுக்கு நாள் இளைஞர்கள், மாணவர்கள், பிற அமைப்பை சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி எஸ்.டி.பி.ஐ. கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நெல்லையில் சமுதாய அமைப்பு ஒன்றின் மாவட்ட பொருளாளராக பயணித்த மஹபூப் ஜான் அவர்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ. கனி, செயலாளர் ஹயாத் முகம்மது, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முபாரக் அலி, சுத்தமல்லி நிர்வாகி ரிபாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் 250க்கும் மேற்பட்டோர் தேசிய அரசியல் பேரியக்கமான எஸ்.டி.பி.ஐ. கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.