நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று பிற்பகலில் கடும் சூறாவளி காற்றுடன் மழை...






நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று பிற்பகலில் கடும் சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுத்தமல்லி அருகே உள்ள கருங்காடு பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் கீழே சாய்ந்து நாசமானது. மேலும் அப்பகுதியில் உள்ள விதைப்பண்ணை கூடாரம் காற்றில் பறந்தது.