பாளையங்கோட்டை சேவியர் காலனி யில் கேஸ் குடோன் அருகே தீ விபத்து.





நெல்லை புதிய பேருந்துநிலையம் அருகே சேவியர் காலனியில் இன்டேன் கேஸ் ( சிவா கேஸ் ஏஜென்ஸி ) குடோன் உள்ளது., இந்த குடோனின் காம்பவுண்ட் சுவரை அடுத்து காலி இடம் உள்ளது. இன்று காலை 11.30 மணி அளவில் இந்த காலி இடத்திலுள்ள காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி குடோனை நோக்கி வரத்தொடங்கியது. இதுகுறித்து அந்தப்பகுதியைச்சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்புதுறையினர் விரைந்துவந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் மிகப்பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது...