கவச உடையின் கண்ணீர்துளிகள்

கவச உடை பற்றி
எனக்கு அதிகம் தெரியாது.
சிறுவயதில் எனக்கு தெரிந்ததெல்லாம்
கவசத்துடன் பிறந்த
கர்ணன் கதை மட்டுமே.
கர்ணன் தன் உடலிலிருந்து
கவசத்தை பிரிக்கும் காட்சி
கண்களை குளமாக்கும்.
இரத்தம் தோய்ந்த கவசம்
கர்ணனின் கொடையை விளக்கும்.
கண்ணுக்கு தெரியாத
எதிரியிடம் போராட
கவச உடை அணிந்தபின்
மருத்துவர் கழட்டும்போது
வியர்வை தோய்ந்த கவசஉடை
மருத்துவரின் தியாகத்தை விளக்கும்.
மருத்துவர் தியாகத்தை மதிப்போம்.
செவிலியர் பணியினை போற்றுவோம்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்