நெல்லை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி, மருந்து, வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது...


நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி, மருந்து, வெண்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி , மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு சிறப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்தார் .
நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு சிறப்பு அதிகாரியாக தமிழக அரசால் கைத்தறித்துறை இயக்குனர் கருணாகரன் மற்றும் காவல்துறை ஏடிஜிபி மகேஷ்அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு குழு அதிகாரிகள் கருணாகரன் மற்றும் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான அனைத்துதுறை அதிகாரிகளின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முதற் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ், நெல்லை சரக டிஜஜி பிரவீன்குமார் அபினவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா மற்றும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினர் கூட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு அதிகாரி கருணாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகம் , காவல்துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை நோய் தொற்று உள்ளவர்கள் 55 பேர் உள்ளனர் . ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார் , பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் . மேலும் பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் , சளி உள்ளதா என கணக்கெடுத்து வருகின்றனர் . நெல்லை அரசு மருத்துவமனையில் படுகை்கை வசதிகள் , வெண்டிலேட்டர் , மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் தயாராக உள்ளது, எனவே பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை , மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாவட்டத்தில் மேலப்பாளையம் , டவுண் , கோடிஸ்வரன்நகர் , பேட்டை , பாளையங்கோட்டை , களக்காடு, பத்தமடை , வள்ளியூர் ஆகிய 8 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , உறவினர்கள் என 160 பேரிடம் சோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு பாசிட்டிவ்வும் , 140 பேருக்கு நெக்கடிவும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் 200 பேரிடம் மாதரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்ததில் 97 நெக்கடிவாக வந்துள்ளது. மற்றவர்களின் முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் . என கூறினார் .