நெல்லையில் கடுமையான வாகன சோதனையை மீறி தேவையின்றி வெளியே வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு







144 தடை உத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய காரணம் இன்றி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த நெல்லை மாநகர் முழுவது பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் வாரம் இருமுறை மட்டுமே வெளியே செல்லும்வகையில் மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு சோதனை சாவடிகளில் கண்காணிக்கப்படுகிறது. மீறி அத்தியாவசிய காரணம் இன்றி வெளியே வருபவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இன்று 23.04.2020 காலை முதல் காய்கறி வாங்குவதாக கூறிக்கொண்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு வழியாக டவுன் செல்கின்றனர். மேலும் ஒருசிலரைத்தவிர பெரும்பாலானோர் அனுமதி அட்டை இல்லாமல் வருகின்றனர். குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலிருந்து வெளியேவருபவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து தேவையில்லாமல் வெளியே வருபவர்களை தடுக்கவேண்டும்.