top of page

50 ஜிபி டேட்டா இலவசமா? வாட்ஸப்பில் வலம் வரும் ஆபத்தான FIFA லிங்க்..

50 ஜிபி டேட்டா இலவசமா?

வாட்ஸப்பில் வலம் வரும் ஆபத்தான FIFA லிங்க்..

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன். இதைத் திறக்கவும் 50 GB இலவசம் என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.*

*இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்குஷேர் பண்ணுங்க என வரும். நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது. நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க. நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியே தான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.*

*இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள் தகவல் திருடப்படலாம்.*

*மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருக்கிறது.*

*எனவே இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.*

21 views0 comments
bottom of page