top of page

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 33 பவுன் தங்க நகைகள் மீட்பு.


தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 33 பவுன் தங்க நகைகள் மீட்பு. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.




இராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கூர் பண்ணையார்குளம்,கால்கரை, இராதாபுரம், அழகனாபுரம், உதயத்தூர் மற்றும் தனக்கர்குளம் ஆகிய பகுதியில் வீட்டின் கதவை உடைத்தும் மற்றும் தனியாக இருக்கும் பெண்களின் கழுத்தில் இருந்து நகைகளை பறித்து சென்ற வழக்கு என தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. மேற்படி சம்பவங்களில் தொடர்புடைய எதிரியை விரைந்து கைது செய்யும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.நெ.மணிவண்ணன்,IPS.,* அவர்கள் *வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி சாந்தி* அவர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் *காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்* எதிரியை தேடி வந்த நிலையில், கைரேகையை வைத்து, திருட்டு வழக்கில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த சுயம்புலிங்கம்(45), என்பது தெரியவந்தது. மேற்படி சுயம்புலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்து 33 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


இவ்வழக்கில் சிறப்பான வகையில் புலன் விசாரணை செய்து, எதிரியை கைது செய்து, நகைகளை மீட்ட *வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி* மற்றும் *இராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு வள்ளிநாயகம் தலைமையிலான காவல் துறையினரை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.*

10 views0 comments
bottom of page