top of page

21 நாட்கள் ஊரடங்கில், நேற்றைய ஒரு நாள் அனுபவத்தில் மக்கள் கூடுதலாக செய்ய வேண்டியவை.

சமூக பொறுப்புணர்வு





🎯 நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு வாக்கிங் போவதை நிறுத்தி, வீட்டிலேயே உடற்பயிற்சி அல்லது யோகா செய்யவும். வாக்கிங் போயே ஆக வேண்டும் என்றால் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் மட்டும் செல்லவும்.


🎯குழந்தைகள் சைக்கிளில் சுற்றுவதையும் இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் அறவே தவிர்க்க வேண்டும்.


🎯 ஒவ்வொரு தெருவிலுள்ள இளைஞர்கள் வாட்ஸப் மூலம் ஒருங்கிணைந்து தங்களுக்குள் ஷிப்ட் முறையில் தெருவை கண்காணிக்க வேண்டும்.


🎯அந்த தெருவில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்களில் ஒருவரே சென்று வாங்கி அவர் வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியே வருவது தடுக்க படும் .


🎯வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பொருட்களை தெருமுனையில் பெற்று அனுப்பி விடலாம்.


🎯 தெருவில் உள்ள யாருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.


🎯 வெள்ளம் , புயல் போன்ற நேரங்களில் தன்னார்வ பணியாற்றியது போல் இந்த பேரிடர் நேரத்திலும் செயல்பட வேண்டும்.


🎯 உங்களை பகுதியில் மார்ச் 1 க்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வந்திருந்தால் அதனை கொரோனா வைரஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தரவும்.


“உங்களைக்காக நாங்கள் வெளியே

நாட்டுக்காக நீங்கள் உள்ளே”


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

13 views0 comments
bottom of page