திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் விவசாயிகளுக்கான 2000 மாவது இலவச விவசாய மின் இணைப்பு...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட 100000 தமிழக விவசாயிகளுக்கான இலவச விவசாய மின் இணைப்பில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் 2000 மாவது இலவச விவசாய மின்னிணைப்பு வீகேபுதூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட திரு.வெ.ஆறுமுகச்சாமி S/O. வெளியப்பத்தேவர் , வெள்ளகால் கிராமம் அவர்களுக்கு திரு.கற்பக விநாயக சுந்தரம், செயற்பொறியாளர், பகிர்மானம்/தென்காசி , திரு.ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் சுரண்டை , திரு.சண்முகவேல், இளநிலை பொறியாளர்,வீகேபுதூர் மற்றும் சுரண்டை உபகோட்ட உதவி மின் பொறியாளர்கள் திரு.ஷேக் உமர் பரூக், திரு.மனோகரன்,திரு.முகம்மது அலி ஆகியோரது முன்னிலையில் வழங்கப்பட்டது. (மி.இ எண்:07 - 038 - 010 - 1019.வீ.கே.புதூர்)