17.11.19 அன்று தான் பவுண்டேசன் சார்பில் 83 வது பசுமை நடை( *Green walk*) நிகழ்வு
17.11.19 அன்று தான் பவுண்டேசன் அழைத்துச்செல்லும் பசுமை நடை( *Green walk*) 83 வது நிகழ்வில் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட தலைவர் திரு. மீனாட்சி சுந்தரம், மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி. Dr. லிங்கச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். பசுமை நடை நிகழ்வு கருங்காலக்குடி அருகிலுள்ள அருக்கங்குடி என்ற குக்கிராமத்தில் நடைபெற்றது. இன்றும் பத்து தலைமுறைக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி பூஜிக்கப் பட்டு வரும் *காட்டு கருப்பசாமி* கிராமக் கோவில் ஒரு அடர்வனத்தில் உள்ளது. ஒரு மேடை, ஒரு அருவாள், ஈட்டிக்கம்பு இவைதான் சாமி. வயதிற்கு வந்த பெண்கள் அனுமதி இல்லை. அந்த காட்டிற்குள் நுழையும் போதே காலில் செருப்பு போடக்கூடாது. அங்கு விழுந்து கிடக்கும் மரங்களைக்கூட மக்கள் விறக்கிற்காக எடுத்துச் செல்வதில்லை என்பது அந்த ஊர் கட்டுப்பாடு. அந்த அடர்வனத்தில் பல வகையான அரிய வகை மரங்கள், மூலிகை மரங்கள் மூலிகைச்செடிகள் வளந்துள்ளது என்பது அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் Dr.ஸ்டீபன் அவர்கள் அந்த பகுதியில் 83 அரிய வகை தாவரங் இருப்பதை கண்டறிந்து அது குறித்து விளக்கம் தெரிவித்தார். அவற்றில் சில நீங்கள் அறிய தருகிறேன். *அழிஞ்சில்* இது ஆயுர்வேத மருத்துவ பண்பு கொண்டது *வெள்ளிருவை* 800 ஆண்டுகளுக்குமேற்பட்ட மரம் பல மருத்துவ கொண்ட மரம் கோடரியால் வெட்ட இயலாத கெட்டித்தன்மையுடைய மரம் பார்க்கவே அதிசய தக்க வகையில் இருந்தது. இது அழிந்து வரும் ஒரு மர இனம் என தெரிவிக்கப் பட்டது. *கடம்பு, மஞ்சக்கடம்பு* இவ்வரிய மரஇனங்களையும் கண்டு வந்தோம். *ஆவி* இவ்வகை மரங்கள் மிகவும் கட்டித்தன்மையுடையது எனவும் ஆங்கிலேயர்காலத்தில் துப்பாக்கி ரவைகளில் கார்பனை (இம்மரத்தை எரித்து கிடைக்கும் கரி மிகவும் கடினத்தன்மையுடையது) துப்பாக்கி தோட்டாவில் நிரப்பி பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் *தைலாக்கொடி*, *ஓடங்கொடி* போன்ற ராட்ஸச கொடிகள் மரங்களில் படர்ந்து பல அரிய மரங்களின் வளர்ச்சியை குறைத்துள்ளதை கண்ணால் காணமுடிந்தது. மொத்தத்தில் பல அரிய மரங்களையும் அதன் குணங்கள் மற்றும் பயன்களை பற்றியும் அறிந்து கொண்டோம். Dr. ஸ்டீபனுக்கு நன்றி தெரிவித்து வந்தோம். இந்த பசுமை நடை எனக்குள் பலவகை எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது *இது போன்ற பல அரிய வகை மரங்களை கண்டறிந்து அம்மரங்களை நன்கு வளர்த்து அடர்வனங்களை உருவாக்கவோம் என உறுதி கொள்வோம்.*