144 தடை உத்தரவை மீறி குளிர்சாதன வசதியுடன் செயல்பட்டு வந்த முடி வெட்டும் கடைக்கு சீல்...




கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் 144 தடை உத்தரவை மீறி நோய் தடுப்பு நடவடிக்கைக்கு இடையூறாக பாளையங்கோட்டை ஏ. ஆர். லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் குளிர்சாதன வசதியுடன் செயல்பட்டு வந்த முடி வெட்டும் கடை மாநகராட்சி ஆணையாளர் திரு கண்ணன் உத்தரவு படி, உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்களின் அறிவுரை படி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நடராஜன், பெருமாள் மற்றும் கொரோனா தடுப்பு காவல் துறை தலைமை காவலர் மாயாண்டி மற்றும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.