நெல்லையில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு தாமதமாக வெளியானதால் இன்று வெறிச்சோடிய கடைகள்...








நெல்லை மாநகராட்சியின் 55 வார்டு பகுதியில் கடந்த 26ம் தேதி மற்றும் இன்று 03.05.2020 ஆகிய 2நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 26 ம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இன்று (03.05.2020) முழு ஊரடங்கு என உத்தரவு உள்ளது. இந்தநிலையில் நேற்று மத்திய அரசு 04.05.2020 முதல் ஊரடங்கில் தளர்வு அறிவித்தது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு விலக்கிக்கிக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு பொதுமக்களை சென்றடையவில்லை. இதனால் இன்று நெல்லை மாநகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்டது. நெல்லை டவுன் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. டவுன் 4 ரதவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது...