144 தடை உத்தரவுவினை மீறி கோவில்பட்டியில் ஊழியர்களை வைத்து செயல்பட்ட தனியார் பள்ளி
144 தடை உத்தரவுவினை மீறி கோவில்பட்டியில் ஊழியர்களை வைத்து செயல்பட்ட தனியார் பள்ளி - பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார்
கோவில்பட்டியில் உள்ள காமராஜ் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் பள்ளி நிர்வாகம் 25க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து அடுத்த கல்வியாண்டுக்கான பாடபுத்தகங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தாசில்தார் மணிகண்டன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து பணியாளர்களை வெளியேற்றி, பள்ளி மூடி பள்ளி சாவியை தாசில்தார் மணிகண்டன் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.